"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
புதுச்சேரி கடலில் விடப்பட்ட "ஆலிவ் ரிட்லி" வகை ஆமைக் குஞ்சுகள்
புதுச்சேரி கடற்கரையில் புதிதாக முட்டையிலிருந்து வெளிவந்த 500 க்கும் மேற்பட்ட 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில், ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள், முட்டையிட கரைக்கு வருகின்றன. இந்த ஆண்டு புதுக்குப்பம், நல்லவாடு, நரம்பை கிராம கடலோரப் பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் கடல் ஆமைகள் முட்டை இட்டுச் சென்றன.
இந்த முட்டைகளை, வனத்துறையினர், உள்ளூர் இளைஞர்கள் துணையுடன் சேகரித்து, பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்குப்பம் கடற்கரையில் மண்ணில் புதைத்து பாதுகாக்கப்பட்டு வந்த முட்டைகளில் இருந்து, 500 முட்டைகள் பொரிந்து, ஆமை குஞ்சுகள் வெளிவந்தன. அவற்றை வனத்துறையினர் கடலில் விட்டனர்.
Comments